.

Pages

Friday, January 16, 2015

துபாயில் கிரிக்கெட் தொடர் - இறுதி போட்டியில் அதிரை அணி அதிர்ச்சி தோல்வி!

துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் முத்துப்பேட்டை அணியுடும் அதிரை அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது இதன் மூலம் இவ்வாண்டின் EMERALD 2014-15 தொடரை முத்துப்பேட்டை அணி கைப்பற்றிது 
இன்று காலை நடைபெற்றதில் டாஸ் வென்ற நமதூர் ABCC DXB அணி முதலில் மட்டைப்பணியை தேர்வு செய்து 16 ஒவரில் 123 எடுத்தது பின்பு ஆடிய முத்துப்பேட்டை அணியுனர் அதிரடியாக ஆடி மிக எளிதில் தனது இலக்கை அடைந்தனர் 13ஒவர்களில் 124 அடித்து வெற்றிபெற்றனர்.

நமதூர் அணி தரப்பில் சமீமுதீன் 31, தமீம் 22 மற்றும் அஸ்லம் 18 ரண்கள் எடுத்து ஒரளவிற்க்கு தனது அணி விக்கெட் சரிவிலிருந்து கட்டுப்படுத்தினர் மறுமுனையில் முத்துப்பேட்டை அணியில் சிறந்த மட்டையாளர் முஸ்தாக் 60 எடுத்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு பாராட்டுக்கள்,

கடந்த இருமாதங்களாக நடந்து முடிந்த இத்தொடர் போட்டியில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை கண்டிராத ஒரே அணி நமதூர் அணிதான் என்பது குறிப்பிடதக்கது.

இத்தொடரில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன அனைத்தையும் நமதூர் (ABCC DXB) அணியே தட்டிச் சென்றது. சிறந்த சதம் அடித்ததற்க்கான விருதை நிஜாஸ், சிறந்த தொடர் நாயகன் விருதை சமிமுதீன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் விருதை ரியாஸ் அகமது பெற்றுக்கொண்டனர்.
கடல்தாண்டி இரு அணிகளும் தன்னுடைய வேலை பழுவிலும் தனது ஊரில் பெருமையை பரைசாற்றும் விதத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தி பிறரை ஆச்சரியப்பட வைக்கும் வீரர்களை அதிரை நியூஸ் வாழ்த்தி மகிழ்கிறது. 

அதிரை தென்றல் (Irfan )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.