முத்துப்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிமிண்ட் சாலை பணியை உடன் துவங்க வேண்டும், சேதமாகி உள்ள பங்களா வாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமிண்ட் சாலையை சீரமைக்க வேண்டும், செம்படவன்காடு முதல் மங்களூர் வரை உள்ள இணைப்பு சாலையை புதிதாக போடவேண்டும், 7-வது வார்டில் குடிநீரில் சாக்கடை கலப்பதை உடன் சரி செய்யவேண்டும் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேட்டை உடன் சரி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று நடைப்பெற்றது. பேரூராட்சி முன்னால் கவுன்சிலர் முகமது மைதின் தலைமை வகித்தார். சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகைதீன் பிச்சை, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஹாஜா, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெகபர்அலி, மஸ்தான் சாகுல் ஹமீது, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் கலந்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.
இதில் மாநில செயற்குழு ஊறுப்பினர் சுப்பையன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மன்னார்குடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயேந்திரன், வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், வட்டார பொறுப்பாளர் ஐ.எஸ்.ஆர்.பாலா, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து ஆகியோர் கண்டித்து பேசினார்கள். இதில் பேரூராட்சிக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர். இதில் முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர் முகைதீன்பிச்சை, மாவட்ட செயற்குழு ஊறுப்பினர் உப்பூர் வீரசேகரன், வட்டார நிர்வாகிகள் உதயை தங்கராஜன், எக்கல் இளவரசன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் தஸ்தகீர் மற்றும் ராமகிருஷ்ணன், ஆனந்த், ஓவரூர் கண்ணையன், தில்லை குணசேகரன், நாசர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் வட்டார நிர்வாகி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.