.

Pages

Sunday, January 18, 2015

தொடர் வெற்றிகளை குவித்து வரும் அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினர் !

திருவாரூர் மாவட்டம் இடும்புவனத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து தொடர் போட்டி கடந்த 17-01-2015, 18-01-2015 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினரும், நாக்கை மாவட்டம் குறவாப்புலம் அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினர் முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றனர்.

இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை பெற்ற அதிரை ஃப்ரண்ட்ஸ் ESC அணியினரை பலரும் பாராட்டினர். இதே அணியினர் கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து தொடர் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. மாஷா அல்லாஹ்...

    வாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...

    ReplyDelete
  2. என் இனிய கீழத்தெரு விளையாட்டு வீரர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்...
    வாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்...
    வாழ்த்துக்கள் ESC நண்பர்களே ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.