.

Pages

Saturday, January 10, 2015

முஸ்லிம்களின் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது ? INTJ மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி பேட்டி !

முத்துப்பேட்டைக்கு வருகை தந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில்: 'தமிழகம் முழுவதும் பிஜேபியினர் உள்ளிட்ட ஹிந்துத்துவாவினர் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது போன்ற வன்முறைத்தனமான தாக்குதலின் காரணமாக சிறுபான்மை மக்களின் உயிர், உடைமைகளுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக சிறுபான்மையினரை முடக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முத்துப்பேட்டையில் வருடந்தோறும் முன்னெடுக்கப்படுகின்ற விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் நிகழ்வதும் அதன் மூலம் முத்துப்பேட்டை முஸ்லிம்களுக்கு இழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, காவல்துறை எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இது காவல்துறைக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு சிலர், குறிப்பாக இளைஞர்கள் எதிர் வினை காட்டி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியும். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அறவழி சிந்தனை கொண்ட இஸ்லாமிய அமைப்புகளின் வழிகாட்டுதல் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் காரணமாக சில வருடங்களாக முத்துப்பேட்டை மக்கள் அமைதி காத்து வருகின்றனர். அதே சமயம் தொடரும் இது போன்ற வன்முறைகளின் காரணமாக எதிர்வினை காட்ட வேண்டும் என்ற சிந்தனை மீண்டும் துளிர் விடுமோ? என நாங்கள் அஞ்சுகிறோம். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் ஒரு சமூகம் எதிர்வினை காட்டுவதென்பது நியாயமானது தான் என்றாலும் அந்த வன்முறை சிந்தனையை வளர விடக்கூடாது. இதை காவல்துறை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். குமரி மாவட்டம் நாகர் கோவிலில் பிஜேபி பிரமுகர் முத்துராமன் தாக்கப் பட்ட சம்பவத்தையொட்டி 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் தாக்கப்பட்டிருக்கின்றன. காஞ்சி மாவட்டம் உத்திரமேரூரில் பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மிக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள். கடந்த வருடம் நடத்த முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம் வீடுகளை தாக்கி வன்முறையை நிகழ்த்திய 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதே போல சில தினங்களுக்கு முன் முத்துப்பேட்டை அம்மா பள்ளி தர்கா மீது தாக்குதல் நடத்தியவர்களில் சுமார் 13 பேர் வரை கைது செய்த காவல்துறை 50 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. இதே போல, நாகர் கோவிலில் முஸ்லிம்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்கு சிலரை கைது செய்திருப்பதாக தெரிகிறது. உத்திரமேரூர் சம்பவத்தில் கைது குறித்த தகவல்கள் இது வரை நம் கவனத்திற்கு வரவில்லை. காவல்துறையின் இது போன்ற கைது நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. அதே சமயம், இந்த தாக்குதல்களால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது ? வன்முறை சம்பவங்களையொட்டி ஏற்படும் சேதாரங்கள் இழப்புகளுக்கு எந்த வித நிவாரணங்களும் செய்து கொடுக்கப்படுவதில்லை. இழப்பீடுகளும் வழங்கப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் இவை. ஆனால், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் அலட்சிய மனப்பான்மையுடனும் சில வேளை பாரபட்சத்துடனும் நடந்து கொள்கிறது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை மேற் கொள்ளவேண்டியதும் மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும் இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்தார்.

செய்தி மற்றும் படம்: 
'நிருபர்' மொய்தீன் பிச்சை 
முத்துப்பேட்டை

1 comment:

  1. நம் சமுதாயம் மீது எவ்வித தாக்குதல் ஏற்பட்டாலும் அதற்க்கு கண்டனக் குரல் மட்டும் தான் ஒலிக்கிறது பாதிக்கப் பட்டவர்களுக்கு துணையாக யாரும் நிற்பதில்லை என்பதை மல்லிப்பட்டினம் சம்பவம் உணர்த்தியது. மாவட்ட நிர்வாகம் செம்மையாக செயல்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்கும் அது இருக்கா ....?

    தினமும் சமுதாய மீது ஆளும் வர்க்கத்தால் தாக்குதல் தொடர்வதை பார்க்கலாம் நாம் தீவிரவாததிற்கு எதிராக பிரசாரம் பண்ணுறோம் ஆனா பிஜேபி காந்தி கொன்றவனுக்கு கோவில் கட்டுறான் அது மட்டுமா ஒரு ஹிந்து தம்பதி குறைந்தது 4 குழந்தைகள் பெற்றாக வேண்டும் என்று அறைகூவல் விடுகிறான்.

    நம்மில் பல அமைப்புகள் உள்ளது தேர்தல் வந்தால் ஒவ்வொருத்தரும் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தெருவிக்கிரார்கள் நாம் ஓட்டு போட மட்டும் தான் பிறந்தோமா? சமுதாயத்தை ஒருங்கிணைத்தால் ஆளமுடியாதா? ஏன் பிளவு ? யாரு காரணம் ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.