முத்துப்பேட்டை வட்டாரத்தில் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பி.பி.டி ரகம், சி.ஆர் போன்ற நெல்கள் விளைச்சல் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பயிர்களை மூன்று மாதமாக மழை, வெள்ளம், காற்று போன்ற பாதிப்புகளை கடந்து காப்பாற்றி வந்தனர். தற்பொழுது 90 முதல் 110 நாட்கள் கடந்த நிலையில் உள்ள பயிர்களுக்கு 20 நாளில் கிலோரி பைப்பாஸ் மருந்து தெளிக்கப்பட்டது. 40 நாளில் புரப்பனபாஸ் மற்றும் கார்பன்டிசம் தெளிக்கப்பட்டது. 60-வது நாளில் டிரைசோபாஸ், புரோப்பிக்கோனவோல், புரப்பனபாஸ், சைபர் மித்திரியன் போன்ற மருந்துகள் தெளிக்கப்பட்டது. 4-வது முறையாக 4 முறை பேம் மருந்து தெளிக்கப்பட்டது. 5-வது முறையாக கிமிட்டா கிலோ பிரன்மிட் மருந்து 3 முறை தெளிக்கப்பட்டது. இவ்வளவு போராட்டத்திற்கு பிறகு வளர்ந்து செழித்து தயாராகி இன்னும் 10 தினங்களில் அறுவடை செய்யும் தருவாயில் உள்ள பயிர்களுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. மேலும் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பாலான கிராமங்களில் குழநோய், புகையான், நெல்பழன் போன்ற நோய்கள் தாக்கி உள்ளதால் 40 சதவீதம் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக தில்லைவிளாகம், கீழக்கரை, மேலவாடியக்காடு, மேலபெருமலை, கீழபெருமலை கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பெரும் அளவில் நோய் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 36 மூட்டை நெல் வரும் நிலையில் தற்பொழுது இந்த நோய்கள்; தாக்குதலால் ஏக்கருக்கு 5 மூட்டை நெல் கிடைப்பதே அரிது என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பூச்சி தாக்குதலுக்கு உரம் தட்டுபாடு ஏற்பட்டப்பொழுது சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தரமற்ற யூரியா உரங்களை பயிர்களுக்கு தெளித்ததின் காரணம்தான் என்று கவலையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும்; முத்துப்பேட்டை வேளாண்மை துறை அதிகாரிகளும் இது வரை பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில்:
கீழக்கரை கிராம பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளது. பயிர்களுக்கு பலவித மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்த நிலையில் கடைசியாக புகையான் தாக்க ஆரம்பித்தது. ஏக்கர் ஒன்றுக்கு 250 மில்லி 3500 ரூபாய் விலை கொண்ட பேம் மருந்து அடித்தும் காப்பாற்ற நினைத்தோம். ஆனால் முடியவில்லை. பயிர் முழுவதும் புகையான் தாக்கி முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். 36 மூட்டை நெல் கிடைக்கும் நிலையில் தற்பொழுது 5 மூட்டை கிடைப்பதே அரிதாக உள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் எங்களுக்கு எந்த வித ஆலோசனையும் வழங்கவில்லை. விவசாயத்தால் ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் நன்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது விவசாயத்தால் பெரும் நஷ்டத்தில் இருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து விவசாயி துரை.சிவபிரகாசம் கூறுகையில்:
நான் 20 வயதிலிருந்து விவசாயத்தில் ஈடுப்பட்டு வருகிறேன். முன்பெல்லாம் இயற்கை உரங்களை தெளித்து பயிர்களை காப்பாற்றி நல்ல விளைச்சலை கண்டோம். தற்பொழுது வேளாண்மை துறை பல்வேறு மருந்துகளை கொடுத்து தற்பொழுது இந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது குறிப்பாக உரத்தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் பாதிப்பு தான் இந்த நோய் தாக்குதலுக்கு காரணம் என்று கவலையுடன் தெரிவித்தார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.