.

Pages

Saturday, January 10, 2015

போக்குவரத்து சீரமைப்பு: காவல்துறை ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!

பேராவூரணியில் காவல்துறை ஆய்வாளராக அண்மையில் பொறுப்பேற்ற அன்பழகன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
         
பேராவூரணி நகரம் தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு பகுதியாகும். கடைவீதி, பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும்

பொது இடங்களில் பள்ளி மாணவியர்கள், பெண்களை கிண்டல் செய்யும் ஒரு கும்பல் சுற்றிக் கொண்டே திரியும். அதே போல் குடிகாரர்கள் தொந்தரவும் இருந்தது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. மேலும் பேருந்து நிழற்குடைகள், பொது இடங்களில் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களின் அட்டகாசம் இருந்தது. அன்பழகன் காவல்துறை ஆய்வாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக ரோந்து சுற்றி வருவதால் இதுபோன்ற தொந்தரவுகள் பெருமளவில் குறைந்துள்ளது.
       
கடைவீதியில் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், சுமையேற்றும் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் வாகன நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில் முதல் கட்டமாக ஸ்பான்சர்கள் உதவியுடன் கடைவீதியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் முதல் ஆவணம் சாலை வரை, சாலையின் இருபுறமும் தரையில் நைலான் ரோப் கயிறுகளை பதித்து வாகனங்கள் நிறுத்துவதற்கான எல்லையினை நிர்ணயம் செய்துள்ளனர்.
       
மேலும் ஆவணம் சாலை, அண்ணா சேதுசாலை ஆகிய இடங்களில் பேரி கார்ட்          ( சாலை தடுப்பு நெறியாணை) அமைத்து, போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையை பாதுகாப்பாக கடக்க உதவுகிறது. மேலும் கடைவீதியில் ரயிலடி எதிரில் பொதுமக்கள்  பேருந்து ஏறுவதற்கும், கங்காணியார் கட்டிடம் எதிரில் பயணிகள் வந்து இறங்குவதற்கும் ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். காவல்துறை ஆய்வாளரே நேரடியாக களத்தில் இறங்கி, சாலையில் அமர்ந்து நைலான் ரோப் கயிறு எல்லை அமைப்பதும், மரத்தில் ஏறி விழிப்புணர்வு தட்டிகளை அமைப்பதும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
       
மேலும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பேராவூரணி பகுதி மக்கள் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது
      .
இதுகுறித்து சமூக ஆர்வலர் சித்தாதிக்காடு கருப்பையன் கூறும் போது, " காவல்துறை ஆய்வாளரின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க ஒன்று என்ற போதிலும், சாலைகளில் சுற்றித்திரியும் பராமரிப்பு இல்லாத கால்நடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நைலான் ரோப் கயிறு எல்லை வரை தரைக்கடைகள் போடுவதை தவிர்த்து, இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வழி விடவேண்டும் " என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.