தமுமுக அதிரை பேரூர் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி எடுத்துரைத்தார். கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டது. கூட்ட முடிவில் தமுமுக அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பிலால் நகர் பகுதி கோரிக்கை மற்றும் சிஎம்பி லேன் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்கள் சரிசெய்ய சம்பந்தப்பட்டோரை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த தமுமுக பொதுக்குழு கூட்டம் 12 வது வார்டில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்ட முடிவில் தமுமுக அதிரை பேரூர் துணை செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இதில் தமுமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
This comment has been removed by the author.
ReplyDelete