இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டை இன்று காலை நடைபெற்ற மதுக்கடை முற்றுகை போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் 90 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அன்வர் தலைமையில் கட்சியினர் இரண்டு வாகனங்களில் பட்டுக்கோட்டை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
காங்கிரஸின் மேல் மக்களின் அதிர்ப்த்தியும் SDPI யின் வளர்ச்சியையும் பார்த்தல் பின் வரும் காலங்களில் BJP vs SDPI களத்தில் மோதும் என்பதில் சந்தேகம் இல்லை.
ReplyDeleteமது நாட்டை சீரழித்து விட்டது; 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுங்கள், மதுவிலக்கை அமல்படுத்துங்கள்' - இந்த குரல், எதிர்கட்சியினர் தமிழகத்தின் எல்லா மாவட்டத்திலும் போராட்டம் செய்கின்றனர், யாரு மது ஆலை வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள், முதல்வரின் தோழி மிடாஸ் ; முன்னால் DMK MP ஜெகத்ரட்சகன் Elite Distilleriess ; முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வயலார் ரவி Empee குரூப்; முன்னாள் DMK அமைச்சர் TR பாலு Golden VATS இன்னொரு DMK அபிமானி SNJ Distilleriess போன்ற மது ஆலைகளை மூடினால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம்; மது ஆலை மூடினால் எப்படி மக்களுக்கு இலவசம் கொடுக்க முடியும், தேர்தல் முடியும் வரை இந்தக் குரல் ஒளித்துக் கொண்டே இருக்கும்.
ReplyDelete