அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு குடியிருப்பின் எதிரே புதிதாக டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதனால் முத்தம்மாள் தெரு குடியிருப்புவாசிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டசியார், அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரை கண்டித்து இன்று காலை முத்தாம்மாள் தெரு குடியிருப்புவாசிகள் அதிரை ஈசிஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முத்தம்மாள் தெரு குடியிருப்புதாரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று செல்லியம்மன் சமுதாய கூடத்தில் கைது செய்து தங்க வைக்கப்பட்டு இருந்த முத்தம்மாள் தெருவாசிகளை சந்தித்தனர்.
இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் காணொளி பதிவு மூலம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதில் 'டாக்சி ஸ்டாண்ட் பிரச்சனையில் அரசியல் வேண்டாம்' என கேட்டுக்கொண்டுள்ளார்.
This comment has been removed by the author.
ReplyDeleteபதவியே பாதுகாதுக்கொள்வதர்க்காக முதலமைச்சர், MP, MLA, பெரிய அரசியல்வாதி இவர்களை நேரில் பார்த்தவுடன் ஜால்ரா அடிப்பது, காலில் விழுவது, சொன்னதுக்கெல்லாம் தலையே ஆட்டுவது இதை எல்லாம் ஒருவன் செய்தால் அவன்தான் நல்ல அரசியல்வாதி, அரசியல் தெரிந்தவன். மக்கள் நலனை கொண்டு அவர்களை எதிர்த்தால், மக்கள் நலனுக்காக, ஊர் முன்னேற்றதிற்கு பாடுப்பட்டால் நிதானம் இல்லாத, பக்குவப்படாத அரசியால்வாதி என்று கூறுகிறார்கள். பேருந்து நிலையத்தில் taxi stand செயல்ப்பட்டுக்கொண்டு இருப்பதால் பொது மக்களுக்கு இடையுறாக இருக்கிறது. பேருந்து நிலையம் பேருந்து நிலையமாக செயல்படவிடுங்கள்.
ReplyDelete