ஏறக்குறைய 80 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதனைச்சுற்றி ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, கருங்குளம், மாளியக்காடு, சேன்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை பெற்றிருந்தும் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையொன்று நமதூரில் இல்லாதது பெரும் குறையாக காணப்பட்டது.
அவசரகால மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுவதை கருத்தில் கொண்டு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு அதிரை - பட்டுக்கோட்டையின் பிரதான சாலையில் பரந்த பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிரையின் மிகப்பெரிய மருத்துவமனையாக ஷிஃபா உருவாகியது.
ஷிஃபா மருத்துவமனையில் சுகாதாரம், பசுமையுடன் காணப்படும் அமைதிச்சூழல், தாராளமான இட வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள், 24 மணி நேர மருத்துவர்கள் மற்றும் மருந்தகம், செவிலியர் சேவை, அறுவை சிகிச்சைக்கூடம், பரிசோதனைக்கூடம் ஆகிய வசதிகளோடு நோயாளிகள் தங்குவதற்கு தனி மற்றும் பொதுவான அறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய நிலப்பரப்பில் குறிப்பாக தஞ்சை அளவில் எந்தவொரு மருத்துவமனையும் பெற்றிராத சிறப்பை நமது மருத்துவமனை பெற்று இருந்தாலும், மருத்துவமனை பராமரிப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகைக்கு ஏற்ப நோயாளிகளின் வருகை போதுமானதாக இல்லை.
அதிரை மக்கள் நாள் ஒன்றுக்கு மருத்துவத்திற்காக செலவீடப்படும் தொகை சராசரியாக ரூபாய் 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்த தொகை முழுவதும் வெளியூர்களில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையம் அதனைச் சார்ந்த டாக்டர்களுக்கு சென்று விடுகின்றன.
அதே போல் குழந்தை மருத்துவத்திற்காகவும், பிரசவத்திற்காகவும் தங்களின் நேரத்தையும், வலியையும் பொருட்படுத்தாது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருப்பதை மறந்து விடுகின்றனர்.
மருத்துவமனைக்கு புதிதாக வருகின்ற டாக்டர்களும் நிரந்தரமாக தங்கி பணிபுரியாமல் வந்த சில மாத காலங்களிலேயே மருத்துவமனையை விட்டுச்சென்று விடுவதும், கூடவே வாடிக்கையான நோயாளிகளையும் அழைத்துக்கொண்டு போவதால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுவது நமது மருத்துவமனைக்குத்தான் என்பதை பலர் யூகித்தனர்.
அதிரையில் தற்போது இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை அவசர சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்ற சிரமங்களையெல்லாம் கருத்தில் கொண்டே நமதூரை சேர்ந்த கொடை வள்ளல்கள், சமூக ஆர்வலர்கள் பலர் நமக்காக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
இந்நிலையில் அதிரை ஷிஃபா மருத்துவமனையின் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையை வழங்குவது தொடர்பாக ஷிஃபா மருத்துவமனையை நிர்வகித்து வரும் ARDA ( Adirai Rural Development Association ) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இதில் நிதி பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றில் சிக்கியுள்ள ஷிஃபா மருத்துவமனையை நிர்வகிக்க மருத்துவ துறை தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, மருத்துவமனையயை பொறுப்பில் ஏற்று நடத்த விரும்பும் நிறுவனங்கள் / மருத்துவமனைகள் / மருத்துவர்கள் தங்களது திட்டத்தையும், இதன் மூலம் ARDA மற்றும் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் எவ்வாறெல்லாம் பயனடையலாம் என்பதை விளக்கி எதிர்வரும் 31-01-2016 க்குள் எழுத்து வடிவத்தில் தங்களது வரைவு திட்டத்தை தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக ARDA தலைவர் ஹாஜி M.S தாஜுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நல்ல முடிவு இன்ஷா அல்லாஹ் நமதூர் இளைய தலைமுறையினர் நல்ல திட்டத்துடன் முன்வருவார்களா. குறைந்தது 20 கோடியாவது முதலீடு செய்பவர்களாக இருந்தால் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரலாம்.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் ARDA நல்ல முடிவுக்கு வந்துள்ளது , நமதூர் மக்கள் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருச்சி என அலைந்து, ஒருபுறம் கடுமையான பொருளாதார சீர்கேடு ஏற்பட்டாலும், நம் பெண் மக்கள் அந்நியர்களிடம் அல்லல் படும் காரணத்திற்காகவாவது ஷிபா ஆஸ்பத்திரி புத்துயிர் பெற்று சிறந்து விளங்க வேண்டும். இதன் முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள் நல்ல கருத்துக்களை எடுத்து வைத்து விரைவில் நம் மக்கள் பயன்பெறும் அளவில் முயற்சி எடுக்க வேண்டும்
ReplyDeleteயா அல்லாஹ் இந்த அதிரை மக்கள் வைத்தியத்திற்காக செய்யும் செலவுகளுக்கும், அவர்கள் வெளியூருக்கு சென்று படும் அவஸ்தைகலுக்குமாவது கருணை காட்டி இந்த ஷிபா ஆஸ்பத்திரியை நல்ல முறையில் விரிவாக்கம் செய்து நடத்த நல்லவர்களுக்கு வாய்ப்பளித்து இதை மென்மேலும் வளர உதவுவாயாக.
ReplyDeleteShifa hospital ஏதோ பொதுத்துறை (அரசு)நிறுவனம் போன்ற பொருளைத் தருகிறது "தனியாரிடம் ஒப்படைப்பது..." என்ற இந்தப் பதிவு! இப்பவும் அது தனியாரின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது. எனவே,
ReplyDelete"ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்தை மருத்துவத்துறையில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள்(Professionals) மேற்பார்வையில் ஒப்படைக்க ARDA முடிவு"
என்று திருத்தினால் பொருள் மயக்கம் கலையப்படும்.
-Shafi MI