தஞ்சை கேன்சர் செண்டரில் தொடர் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஹம்தான் ( வயது 7 ). உயிருக்கு போராடி வரும் இந்த சிறுவனுக்கு சிபிடி சார்பில் தொடர் இரத்தம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள் வீர பாண்டியன், கார்த்திக், பார்த்திபன், நாடிமுத்து மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர் மோகனசுந்தரம் ஆகியோர் உயிருக்கு போராடி வரும் சிறுவன் ஹம்தான் மற்றும் பேராவூரணி நரியங்காடு பகுதியை சேர்ந்த பல்கீஸ் ஆகியோருக்கு தானாக முன்வந்து இரத்தம் தானம் செய்தனர். இவர்களது மனிதநேய பணியை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சிபிடி மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் கூறுகையில், ''கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' அமைப்பின் மூலம் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு சாதி மதம் இனம் பாகுபாடின்றி, நேரம் காலம் பார்க்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக எவ்வித கட்டணமும் நோயாளிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுவதில்லை. தஞ்சை கேன்சர் செண்டரில் தொடர் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஹம்தான் ( வயது 7 ). உயிருக்கு போராடி வரும் இந்த சிறுவனுக்கு சிபிடி சார்பில் தொடர் இரத்தம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறுவனுக்கு மேலும் இரத்தம் தேவைப்பட்டது. பனிச்சுமைக்கிடையில் நம்முடைய அன்பான வேண்டுகோளை ஏற்று காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் வீரபாண்டியன் அவர்களும், நமது கல்லூரி அன்பு மாணவர் மோகன சுந்தரம் அவர்களும் A+ ரத்தவகை தானம் செய்தனர். உயிர் காக்க குருதிக்கொடை செய்த மனிதநேய நல்லுங்களை வாழ்த்துகிறேன்.
மேலும் பேராவூரணி நரியங்காடு சகோதரி பல்கீஸ் என்பவருக்கு புற்றுநோய் ரத்தமாற்று சிகிச்சைக்கு என் அன்புத்தம்பிகள் பேராசிரியர்கள் கார்த்திக், பார்த்திபன், நாடிமுத்து ஆகியோர் தஞ்சையில் ரத்ததானம் செய்தனர். கொடையாளிகளின் மனிதநேயத்தை பாராட்டி வாழ்த்துகிறேன்' என்றார்.











Masaallah
ReplyDeletevaalththukkal sar
akamkulera vaalththevaravearkkum
savanna