சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் லாங்மார்ச் கஜேந்திரன் (63). இவர், இந்திய தேசிய மக்கள் நலன் ஆர்வலர் அமைப்பைச் சேர்ந்தவர். குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக். 15 ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுதில்லியில் இந்தியா கேட் அருகிலிருந்து ராமேசுவரம் வரையிலான சைக்கிள் பயணத்தை கடந்த அக் 15 ஆம் தேதி தொடங்கினார்.
டெல்லியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய கஜேந்திரன், உத்தரப்பிரதேசத்தின் மதுரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்னை வந்து அங்கிருந்து ஈசிஆர் சாலை வழியாக கடலூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக அதிரை காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஹெச் அஸ்லம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிரை காவல்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇது இலேசான காரியம் இல்லை,
செய்திட மனம் வரணும்,
அதோடு தன்னம்பிக்கை வரணும்,
தன்னம்பிக்கை வந்து விட்டால்!
உடல் தானாகவே பெலன் பெற்று விடும்.
இருக்கின்ற பெலத்தோடு, இன்புற்று உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
இறைவன் நாடினால், ஒரு நாள் சந்திக்கலாம்.
K.M.A. Jamal Mohamed.
President – PKT Taluk.
National Consumer Protection Service Centre.
(Non-Political Service Centre)
State Executive Member
Adirampattinam-614701.