அதிராம்பட்டினத்தில் மர்மமான முறையில் 8 ஆடுகள் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (55). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளைக் கொட்டகையில் அடைத்து விட்டு துாங்கச் சென்றார். இன்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, 8 ஆடுகள் இறந்து கிடந்தன.
அப்பகுதியில் உள்ள குப்பைகளில் கொட்டப்படும் உயிர்க்கொல்லி மருந்துகளை தின்று இறந்திருக்கலாம் என தெரிகிறது. ஒரே சமயத்தில் 8 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு நிலவியது.






கொடிய விச ஜந்துக்கள் தீண்டி இருக்கலாம்
ReplyDelete