தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையோரத்தில் காணப்படும் சோடியம் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை கல்லூரி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையில் 10 க்கும் மேற்பட்ட மின்கம்பத்தில் சோடியம் மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்து மின் விளக்குகளும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
//அதிராம்பட்டினம் ECRசாலயில் சோடியம் விளக்குகள் பகலில் எரிகிறது// கவலைப்படாதீர்கள்.இரவில் அணைத்து விடுவார்கள்.
ReplyDelete