தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிராம்பட்டினம் பகுதி நிருபராகவும், 'அதிரை நியூஸ்' இணையதளத்தின் நேர்காணல் நடத்துனராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 9 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். இதுவரையில் 30 தடவை இரத்தம் வழங்கி மொத்தம் 10.50 லிட்டர் இரத்தம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.
இந்நிலையில் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் பெருமகளுர் பிடாரி அம்மன் திருமண மகாலில் பசுமை தேசம் கலாம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தலைமையேற்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரன், ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேசன் நிர்வாகத் தலைவர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் தாவூது கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய 100 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் சிறந்த இரத்த தான சேவைக்காக அதிராம்பட்டினம் சாகுல் ஹமீது அவர்களுக்கு ' பசுமை தேசம் கலாம் 2016 - விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அருகில் பசுமை தேசம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சித. சதீஸ் குமார் உள்ளார்.






வாழ்த்துக்கள் சகோ.ஷஹுல்ஹமிட்.பணி மென்மேலும் தொடர அல்லாஹ் உங்களுக்கு நிறைந்த ஆயுளையும் உடல்நலத்தையும் தருவானாக!ஆமீன்.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் !!!
ReplyDelete