தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கண்ணனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடன் இருந்த நண்பர்கள் மூலம் தகவலறிந்த கண்ணனின் மனைவி மற்றும் பெற்றோர் கடந்த ஜூலை 27ம் தேதி தஞ்சாவூர் கலெக்டர் மற்றும் தன்னார்வ அமைப்பிடம் தீக்காயத்துடன் உயிருக்கு பேராடும் கணவனை மீட்டு தருமாறு மனு கொடுத்தனர்.
மனுவின் பேரில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை மலேசியாவில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் கண்ணன் தீக்காயத்துடன் திருச்சி விமானநிலையம் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளதா என பரிசோதித்தபின் ஆம்புலன்ஸ் மூலம் மனைவி பெரியாச்சி சொந்த ஊரான தூத்துக்குடி லெவஞ்சிபுரத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரது உறவினர்கள், மலேசியாவில் ஏற்பட்ட தகராறில் முதலாளியே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக குற்றம்சாட்டினர்.
கண்ணன் கூறுகையில், கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும், முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டு என்னை கொடுமைப்படுத்தினர். திடீரென சில நிமிடத்தில் என் மீது தீப்பற்றி எரிந்து உயிருக்கு போராடினேன். அப்போது நான் குடிபோதையில் இருந்ததால் தீ விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை. என்றார்.
நன்றி: தினகரன்

நான் குடிபோதையில் இருந்ததால் தீ விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை. என்றார்.
ReplyDeleteஏற்பட்ட அனுதாபம் எங்கேயோ போய்விட்டது. குடி குடியைக் குடிக்கும்.