அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பகுதியில் வசித்து வருபவர் சேக்தாவூது ( 60 ). ஆதரவற்ற முதியவர். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றிக் காணப்பட்டார். இந்நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் தமுமுக நிர்வாகிகள் இவரது இறுதி சடங்கை நிறைவேற்ற முன்வந்தனர். இதையடுத்து அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸில் ஜனாஸா எடுத்துச்செல்லப்பட்டு இன்று காலை தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தமுமுக - மனிதநேய மக்கள் கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். ஜனாஸா நல்லடக்க செலவுகளை அதிரை தமுமுகவினர் பொறுப்பேற்றனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் அதிரை அஹமது ஹாஜா, மமக அதிரை பேரூர் பொறுப்பாளர்கள் சேக்காதியார், கனி, ஹாலித், சேக் நசுருதீன், சலீம், நூர் முஹம்மது உள்ளிட்டோர் இறுதி சடங்கு பணிகளை செய்தனர்.
அதிராம்பட்டினம் தமுமுக சார்பில் தியாகத் திருநாள் - ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது பெறப்பட்ட குர்பானி தோள்கள் மூலம் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கு பயன்படுத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் முதியவரின் ஜனாஸா செலவினங்கள் அனைத்தும் குர்பானி தோள்கள் மூலம் பெறப்பட்ட வருவாயிலிருந்து செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.