துபாய், செப்-23
சமீபத்தில் அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளில் (MENA - Middle East and Northern Africa countries) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 69.1 சதவிகிதம் பேர் அதாவது சராசரியாக 10க்கு 7 பேர் குறைவான சம்பளத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கு அடுத்து 'தனிப்பட்ட நிதி நிலைமை' மன அழுத்தத்திற்குள் தள்ளுவதாக தெரிவித்துள்ளனர், இவர்கள் சுய தொழில் செய்வோராக அல்லது வாங்கும் சம்பளத்தை வீணடிப்போராக இருக்கலாம்.(வரவு எட்டணா செலவு பத்தனா கேஸ்)
இவர்களுக்கு அடுத்தே வேலைப்பளு மற்றும் சொந்தக் கவலைகள் மன அழுத்தத்தின் காரணிகளாக அமைந்துள்ளன.
இதுபோன்ற மன அழுத்த நோயின் வெளிப்பாடால் குடும்பம், நண்பர்கள், வேலை மற்றும் உடல் ஆரோக்கியங்கள் பாதிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சரியான சிந்தனையின்மை.....
ReplyDeleteமுடிவு தம்மிடமே உள்ளது...
இறை நம்பிக்கை ..இறை வணக்கம் ..தீர்வு...