அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்.07
ஒரு காலத்தில் புனிதத்தலங்களை நடந்து கடப்பது என்பதும், கார், பஸ் போன்ற வாகனத்தில் கடப்பது என்பதும் பெருத்த சிரமங்களை ஏற்படுத்தி வந்தன அதிலும் பிரேக் டவுனாகும் வாகனங்களால் ஏற்படும் தொல்லைகளும் சொல்லி மாளாது, இப்படி பல மணி நேர போரட்டத்தை சில நிமிடங்களுக்கு குறைத்து சீரான பயணத்தை ஹஜ் பயணிகளுக்கு தந்தது தான் இந்த ஹஜ் மெட்ரோ ரயில் சேவை.
புனித மக்காவை சுற்றியுள்ள புனிதத் தலங்களான அரபாத், மீனா, முஜ்தலிபா மற்றும் ஜமாரத் இடையே கடந்த 2010 முதல் இயக்கப்படும் மஷாயர் ரயில்வே (Mashaer Railway) என அழைக்கப்படும் ஹஜ் மெட்ரோ ரயில்கள் ஹஜ் பயணிகளின் புனித தலங்களுக்கிடையேயான பயண சிரமத்ததை மிக வெகுவாக குறைத்துள்ளது.
அரபாத்தில் 3 நிலையங்கள், மினாவில் 3 நிலையங்கள், முஜ்தலீபாவில் 3 நிலையங்கள் மற்றும் ஜமாரத் நான்காம் தளத்தில் 1 நிலையம் என சுமார் 18.2 கி.மீ. தூரத்திற்கு 1 முறைக்கு 3500 பயணிகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 72,000 ஹஜ் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
இந்தத் தடத்தில் 10 பெட்டிகள் கொண்ட 17 ரயில்கள் இயக்கப்படுகின்றன, இதில் ஒவ்வொருபுறமும் 60 வாயில்கள் ஏறி, இறங்கவுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 250 பயணிகள் பயணம் செய்யலாம். மணிக்கு 80 முதல் 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.
27 பயிற்சி பெற்ற சவுதி நாட்டவர்களால் கம்க்யூட்டர் வழி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த மஷாயர் மெட்ரோ ரயில் பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.