கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் இன்று 18-09-2016 காலை 10 மணியளவில் அனைத்து சமுதாய பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - சமுக நல்லிணக்க விழா நிகழ்ச்சி அதிரை பேருந்து நிலையம் அருகில் ஈசிஆர் சாலையில் உள்ள பவித்ரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.
இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஹைதர் அலி ஆலிம் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் பிரபல எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாபெரும் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசாக 3 கிராம் தங்க நாணயம், மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், ஆறுதல் பரிசாக தலா 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 17 மாணவ, மாணவிகளுக்கு விழாவில் வழங்கப்பட உள்ளது.
இதன் நேரலை நிகழ்ச்சி இன்று காலை 10 மணியளவில் அதிரை நியூஸில் ஒளிப்பரப்படும்.
Good job ADIRAINEWS keep it up !!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood habit adirai news
ReplyDelete