தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சாகுல் ஹமீது மனைவி ஷாஜஹான் ( வயது 53 ), 16 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக அப்துல் ரெஜாக் மனைவி ஹைருன்னிஸா ( வயது 54 ), 17 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சேட்டு என்கிற அலி அக்பர் மனைவி நஜீலா ( வயது 31 ) ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயசீலன் அவர்களிடம் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் ஆதரவாளார்கள் ஆவார்.
Congrats
ReplyDelete