.

Pages

Wednesday, January 4, 2017

நிறம் மாறும் துபாய் மெட்ரோ பஸ் !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-04
துபை போக்குவரத்து துறையால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் வெள்ளை, சிவப்பு கலந்த நிறத்திலேயே வலம் வரும், இதற்கு நேர்மாறாக மெட்ரோ ரயில்கள் நீள வண்ணம் பூசப்பட்டிருக்கும்.

துபை போக்குவரத்து துறையின் பேருந்துகள் பல்வேறு வகையான சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக 24 மணிநேர சேவை, நட்சத்திர ஹோட்டல்களுக்கு என்று தனி சேவை, மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கிடையேயான சேவைகள் என்பன பல.

இந்நிலையில், பயணிகள் மெட்ரோ நிலையங்களுக்கான பேருந்து சேவைகளை எளிதாக அடையாளம் காணும் வகையிலும், மெட்ரோ ரயில்களின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலும் சுமார் 186 பேருந்துகளுக்கு நீள வண்ணம் பூசப்படவுள்ளது, முதற்கட்டமாக இதுவரை 70 பேருந்துகளுக்கு நீளச்சாயம் அடிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.