அதிரை நியூஸ்: மே 09
கரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நபர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பதினொரு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 65 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை உறுதி செய்யப்பட்ட 65 நபர்களில் 45 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் நகரப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 45 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் ஒரு நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (09.05.2020) குணமடைந்து வீடு திரும்பியவரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் குணமடைந்து வீடு செல்லும் நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 7901 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 7032 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 804 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை:
Date No. of Cases Discharged
16.04.2020 1
21.04.2020 3
23.04.2020 3
24.04.2020 1
25.04.2020 10
27.04.2020 6
28.04.2020 9
29.04.2020 2
01.05.2020 3
03.05.2020 3
04.05.2020 2
07.05.2020 1
08.05.2020 1
09.05.2020 1
TOTAL 46

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.