.

Pages

Sunday, May 17, 2020

அதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி மின்வாரிய பொறியாளரிடம் எஸ்டிபிஐ மனு!

அதிராம்பட்டினம், மே.17
அதிராம்பட்டினம் பகுதிகளில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கக்கோரி, எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதிராம்பட்டினம் பேரூர் துணைத்தலைவர் எஸ்.அகமது அஸ்லம், அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் இரா.சர்மாவை அலுவலகத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட இரா.சர்மா, சீரான மின்சாரம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாராம்.

அப்போது, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் சாகுல் ஹமீது, அக்கட்சியின் ஏரிப்புறக்கரை ஊராட்சி வார்டு கவுன்சிலர் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது;
அதிராம்பட்டினத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரமும் மின் தடங்கல் ஏற்படுகின்றது.இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்களின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.இதனால் சீரான குடிநீர் பெறுவதிலும் மிக சிரமம் உள்ளது.ரமழான் நேரங்களில் இவ்வாறு இருப்பது மிகுந்த சிரமத்தையும் மன வேதனையையும் அளிக்கிறது. அதிகாலை சஹர் நேரங்களிலும், மாலை நேரங்களிலும் இதுபோன்ற மின்வெட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தயவுசெய்து தாங்கள் சீரான மின்விநியோகம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.