அதிராம்பட்டினம், மே 16
கரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிராம்பட்டினத்தை சேர்ந்த நபருக்கு PFI அமைப்பினர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 71 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வரை 62 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 9 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த ஏப்.25 ந் தேதியும், 3 நபர்கள், ஏப்.27 ந் தேதியும், 4 நபர்கள், ஏப்.28 ந் தேதியும், 2 நபர்கள், மே.03 ந் தேதியும், ஒரு நபர், மே.04 ந் தேதியும், 2 நபர்கள், மே.13 ந் தேதியும் எஞ்சிய ஒரு நபர், இன்று (மே.16) சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
ஊர் திரும்பிய இவருக்கு, பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமையில், அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, சால்வை அணிவித்து, பழங்கள் வழங்கி வரவேற்றனர்.
அப்போது, அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இசட். முகமது தம்பி மற்றும் அவ்வமைப்பின் கரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரணப்பணிகள் குழு களப்பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்நிகழ்வு, கரோனா சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.