![]() |
டாக்டர் எச்.இஷ்ரத் நஸ்ரின் (மகள்), டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் (தந்தை) |
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தொடங்கியதும் பெரும்பாலான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், இதற்கு மாறாக கரோனா காலத்தில் நிஜ ஹீரோவாக முழு நேர மருத்துவ சேவையாற்றினார் அதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன். தினமும் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு ஓய்வின்றி மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
பொதுவாக இரவு நேரத்தில் தான் இவருக்கு அதிக அழைப்புகள் வரும். நெஞ்சு வலி, வயிற்று வலி, குழந்தை திடீரென்று அழுகிறது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று பலர் கேட்பார்கள். முதலில் அவர்களுடைய பதற்றத்தைத் தணித்து, அவர்களை கிளினிக் வரவழைத்து உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்வார். அவசர சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கும் இவர், நோயாளிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் தனி முயற்சி எடுத்து சிகிச்சை அளிப்பவர். இரவு நேரங்களில் வரும் பல நோயாளிகளுக்கு அசராமல் சிகிச்சை அளிப்பவர். பல நோயாளிகள் தொலை தூரங்களுக்கு செல்லாமால் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
மாரடைப்பு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து அவர்களை அபாய கட்டத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார். இதற்கு பல உதாரணங்கள் இருந்து வந்தாலும், குறிப்பிட்டு ஒன்றை சொல்வதென்றால், கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினம் உப்பளப்பகுதியில் நிகழ்ந்த மின் விபத்தில் அதிராம்பட்டினம் பேரூர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை உயிருக்கு போராடி வந்தார். அப்போது சம்பவ இடத்திலிருந்து அவரை மீட்டு, உரிய சிகிச்சையளித்து ஆபத்து கட்டத்திலிருந்து அவரை மீட்டெடுத்தார். இந்த சம்பவம் பற்றி பல கூட்டங்களில் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிறார் ஏ.பிச்சை.
ஜாதி, இன, மத என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் எந்நேரமும் இன்முகத்தோடு மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய நல்ல மருத்துவர். ஏழை நோயாளிகள் பலருக்கு கட்டணமில்லா சிகிச்சையளித்துள்ளார். அவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கி இருக்கிறார். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பலருக்கு உதவியவர்.
அதிராம்பட்டினத்தில் கடந்த 1987 ஆம் தொடங்கிய இவரது மருத்துவச்சேவை, அன்று முதல் இன்று வரை ஓய்வின்றி தொடர்ந்து நடந்து வருகிறது. இவரது சேவையைப் பாராட்டி, அதிராம்பட்டினம் சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் இணைய ஊடகம், கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினத்தில் நடந்த கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், சிறந்த மருத்துவச் சேவைக்கான விருதினை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளார் திரு.பாலசுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவராக 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த பேச்சாளர். பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றி வருபவர். மருத்துவம் கற்பிக்க நினைக்கும் மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தில் தனது இரு மகள்களையும் மருத்துவத்துறையில் காலூன்ற வைத்தவர்.
தினமும் வீடு ~ மருத்துவமனை என சுருக்கிக்கொண்டு, நோயாளிகளோடு பயணித்து அவர்களை நோயிலிருந்து காக்கும் நிஜ சூப்பர் ஹீரோ டாக்டர் ஹாஜா முகைதீனின் ஓய்வில்லா மருத்துவச் சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இவரைப்போல், இவரது புதல்வியும், மகப்பேறு மருத்துவருமாகிய டாக்டர் எச்.இஷ்ரத் நஸ்ரின் அவர்களும் திறமை மிக்கவர், மிகவும் சுறுசுறுப்பானவர். நோயாளிகள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் தனி முயற்சி எடுத்து சிகிச்சை அளிப்பவர். அரசின் ஊரடங்கு காலத்தில் முழு நேர மருத்துவ சேவையாற்றியவர்.
ஊரடங்கு காலத்தில், சில தனியார் மருத்துவமனைகளின் மகப்பேறு மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றுவதில் இருந்து விலகி இருந்ததால், அவர்களிடம் வழமையாக செல்லும் கர்ப்பிணி பெண்களின் மாதாந்திர பரிசோதனை மற்றும் பிரசவம் தடை ஏற்பட்டது. இதனால், எப்படி மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறோம் என்று பயந்து தவித்த கர்ப்பிணி பெண்களுக்கு, தானாக முன்வந்து முழுநேர மருத்துவ சேவையாற்றியவர் டாக்டர் எச் இஸ்ரத் நஸ்ரின்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த 50 நாட்களில் அதிக எண்ணிகையிலான கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆனது. இதனால், மகப்பேறு மருத்துவத்திற்காக, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மருத்துவமனைகளுக்கு சென்று பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த கர்ப்பிணிகளும், அவர்களது பெற்றோர்களும் யோசிக்க ஆரம்பித்தனர், இந்த அசாதாரண சூழலில், எவ்வித நிபந்தனையுமின்றி தானாக முன்வந்து பிரசவம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலக்கெடுவில் தாய் ~ சேய் பூரண நலம்பெற்று அவரவர் வீடுகளுக்கு திரும்புவதற்கு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து உதவிய டாக்டர் எச் இஸ்ரத் நஸ்ரின் மருத்துவச் சேவையை, கர்ப்பிணி தாய்மார்கள், பெற்றோர்கள், உறவினர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
ஊர் மெச்சும் அளவிற்கு அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் தந்தை ~ மகளின் மருத்துவச்சேவை, சமூகத்திற்கு பயன்பெறும் வகையில் என்றென்றும் தொடர்ந்திட இவர்களின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனையை நாம் முன் வைப்போம்.
மருத்துவச் சேவைக்காக விருது பெற்ற டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் |
ஜாதி, இன, மத என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் எந்நேரமும் இன்முகத்தோடு மருத்துவ சிகிச்சை அளித்துவரும் டாக்டர் ஹாஜா முஹைதீன் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடுப்பதார்களுக்கும் என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்..by மான் ஷேக்
ReplyDeleteகீழ தெரு
அதிரை
எல்லா தரப்பட்ட நோயாளிகளையும் தைரியமாக எதிர்கொள்வது மட்டுமல்லாது நோயாளிகளுக்கு மனதைரியத்தையும் ஊட்டக்கூடியவர்.அஹ்மது இப்ராஹீம்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteDr. Jamal. M.S. ortho.
ReplyDeleteChettinad hospital.
Kelambakkam
Ippo thavadhu ooru makkal purindhu nadaka vendum
ReplyDeleteOoril nalla maruthuvargal irundhey avargalai adharikamal vendum endru thajavur,pattukottaiku selvadhu
Ineyavadhu nam ooril irukkum maruthuvargalai anugungal
Congratulations, Jazakallahairan.
ReplyDelete