தஞ்சாவூர் மே.11
பேராவூரணி அருகே, கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திமுகவைச் சேர்ந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு ஊராட்சி கலைஞர் நகர் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து அறிந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார், அப்பகுதியில் வசிக்கும் 210 குடும்பங்களுக்கு, தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ 2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை திமுக சார்பில் திங்கள்கிழமை வழங்கினார்.
இதற்கான நிகழ்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது. தி.மு.க மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, பொதுக்குழு உறுப்பினர் முரசு, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான மு.கி.முத்து மாணிக்கம், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தலைமைக் கழக பேச்சாளர் அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலகண்டன் நன்றி கூறினார். கிராம மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.