.

Pages

Thursday, May 7, 2020

அதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

அதிரை நியூஸ்: மே 07
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி அரவை ஆலை முகவர்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 20 மெ.டன் அரிசி  தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி அரவை ஆலை முகவர்கள் சார்பில் கொரோனா நிவாரண உதவியாக 20 மெ.டன் அரிசி  தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் மற்றும் மீனவ குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம், 2000 பைகளில் 20 மெட்ரிக் டன் அரிசி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா நிவாரண உதவியாக 20 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி அரவை ஆலை ஒப்பந்ததாரர்களை மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி அரவை ஆலை முகவர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார், செயலாளர் சதீஷ், பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.