.

Pages

Monday, May 18, 2020

கட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (மே.19) முதல் திறப்பு!

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், மே.18
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்த இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அதிராம்பட்டினத்தில் மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால்,  சேர்மன் வாடி அருகில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஏப்.19 ந் தேதிக்கு பிறகு, புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், 28 நாட்கள் காலக்கெடு நேற்று (மே.17) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்த, அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அதிராம்பட்டினம் பேரூராட்சிப் செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திங்கட்கிழமை காலை அகற்றப்பட்டன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.