தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் இன்று (26.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் வட்டம், வாளமர்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் வடசேரி வாய்க்கால் தூர்வாரும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வாளமர்கோட்டை வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, தஞ்சாவூர் வட்டம், காட்டூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், தென்னமநாட்டில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் கல்யாண ஓடை கால்வாய் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், தெலுங்கன்குடிகாட்டில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருமங்கலக்கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், பேய்கரும்பன்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் அய்யனார்குளம் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், நெம்மேலியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணி,
பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வடகாடு வாய்க்கால் 7 கிமீ நீள அளவில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சக்குடி ஏரி தூர்வாரும் பணி ஆகிய பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதற்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை; விரைவாகவும், தரமாகவும் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் இருபுறமும் கரைகளை பலப்படுத்தி, சமன்படுத்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
பின்னர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அனைத்து பாசன கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக ரூபாய் 567 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடிமராமத்து பணிகளுக்காக சுமார் 500 கோடி ரூபாயும், தூர்வாரும் பணிகளுக்காக சுமார் 67 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 274 தூர்வாரும் பணிகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், டெல்டா பகுதிகளுக்கு வருவதற்கு முன்னர், அனைத்து பாசன கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கண்காணித்திட காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடைமடை பகுதிகள் முழுவதும் தண்ணீர் சென்றிடும் வகையில் ஜூன் 12-ம் தேதிக்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை முடிப்பதே அரசின் நோக்கமாகும். இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின், பயிற்சி ஆட்சியர் அமித் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் குடிமராமத்து மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 195.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3670 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் பொதுப்பணித்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 109 ஏரிகள் சீரமைப்பு பணிகளும், வருடாந்திர தூர்வாரும் திட்டத்தின் கீழ் 944 கிமீ நீள அளவிலான 165 கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 118697 ஹெக்டேர்ஸ் நிலம் பாசன வசதி பெறவுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 608 குளங்கள் மற்றும் ஊரணிகள், அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் குழுக்கள் மூலமாக தலா ஒரு லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்படவுள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 647 கிமீ நீள அளவிலான 336 வாய்க்கால்கள், 9053 கிமீ நீள அளவிலான 2452 சிறுபாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.
When it comes to being the preferred desk recreation, Blackjack could very nicely be king. Simply put, if the participant has a higher poker hand than the supplier, the participant wins both the ante and the play bets. If the participant also guess on the "pair plus" and has a pair, she or he may also win that. Once the players' and sellers' arms are decided and locked-down, the playing cards are 먹튀검증 abc-1111 laid out and compared.
ReplyDelete