அதிரை நியூஸ்: மே.23
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (23.05.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 23 நாட்களாக கொரோனா பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே நோய்த்தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தமிழ்நாடு அரசின் அறிவுரையின்படி தொடர்ந்து சோதனை மேற்கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி இல்லாதவர்களை அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையில் நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லாமல், சளி, காய்ச்சல் அல்லது இருமல் இருந்தால், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்து, ஏழாவது நாள் முடிவில் இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவில் அறிகுறி இல்லாத பட்சத்தில், அவரவர் வீட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி கண்காணித்திட வேண்டும். முதல் பரிசோதனையில் நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்களை, 14 நாட்கள் தொடர்ச்சியாக அவரவர் வீட்டில் தனிமைபடுத்திட வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டும். அறிகுறி இல்லை என்றால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்து கண்காணித்திட வேண்டும். ஏழு நாட்கள் முடிந்த பிறகு இரண்டாவது முறை மருத்துவ பரிசோதனை செய்து, நோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். நோய் அறிகுறி இல்லையென்றால், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திட வேண்டும்.
ஒரு பகுதியிலுள்ள குடும்பத்தில் ஐந்து நபர்களுக்கோ அல்லது அப்பகுதியில் ஐந்து நபர்களுக்கோ கொரோனா அறிகுறி தென்பட்டால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். தொடர்ந்து, அப்பகுதியில் 14 நாட்கள் புதிய தொற்று ஏற்படாதபட்சத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கப்படும். அதன் அடிப்படையில், நாளை மறுதினம் முதல் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் முடிவுறுவதால், அதனை முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
தொடர்ந்து, சமூக இடைவெளி, முகக் கவசம், கைகழுவும் வசதி ஆகியவற்றை உறுதி செய்திட வேண்டும். தாராசுரம் மார்க்கெட்டிற்கு வெளிமாநிலத்திலிருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.