.

Pages

Saturday, May 9, 2020

அமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்கள்!

கின்னஸ் சாதனையாளர்கள் முகமது சைப், அலிஸ்ஸா
அதிரை நியூஸ்: மே.09
அமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அதிராம்பட்டினம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக் என்கிற அதிரை முஜீப். அமீரகம் ஷார்ஜாவில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் அலுவலராகப் பணியாற்றி வரும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

இவரது மகன் முகமது சைப், மகள் அலிஸ்ஸா. இவர்கள் இருவரும் ஷார்ஜாவில் உள்ள கல்ப் ஆசியன் ஆங்கிலப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற ராக்கெட் வடிவில் நின்று உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயற்சியில், இவர்கள் இருவரோடு, 21 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரமாண்டமான மைதானத்தில் ராக்கெட் வடிவில் நின்று, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இந்தச் சாதனையைப் பாராட்டி கின்னஸ் நிறுவனம் முகமது சைப், அலிஸ்ஸா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

மேலும், சிறுமி அலிஸ்ஸா, ஷார்ஜாவில் மலபார் கோல்ட் ஜுவல்லரி நிறுவனம் நடத்திய ஓவியப்போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

9 comments:

  1. பிறந்த ஊருக்கு பெருமை தேடி தந்த செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்...
    பிறந்த மண்ணுக்கும்
    கற்ற மொழிக்கும்
    பெற்ற தாய் தந்தையர்க்கும்
    பெருமைத்தேடி ..உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த செல்வங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் செல்லங்களை

    ReplyDelete
  4. பெற்றோர் புகைப்படம்
    இனைத்து இருக்கலாம்

    எந்த தெரு என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாம்





    வாழ்த்துகள்

    நம் ஊர்யின் சிறகுகளுக்கு

    ReplyDelete
  5. தொடரட்டும் சாதனைகள், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Maasha Allah..May Almighty Allah bless them abundantly to achieve many more accolades in their life..

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் । நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுடன் வாழ துவ செய்வோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.