.

Pages

Saturday, May 9, 2020

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியவில்லையெனில் அப்பகுதிக்கு தளர்வு: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: மே 09
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்களுக்கு புதிதாக எந்தவொரு நோய்த்தொற்றும் கண்டறியப்படாவிட்டால், அப்பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கான நிபந்தனைகளிலிருந்து தளர்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (10.05.2020) முழு ஊரடங்கு கிடையாது. அரசின் தளர்வுகளின்படி, 144 தடை உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்ண அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. பொது இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

முககவசம் அணியாதவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் பரிசீலிக்கலாம்.

இருசக்கர வாகனங்களில் ஒரு நபரும், நான்கு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களும் மட்டுமே செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச் சாவடி வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கையில் முத்திரை வைத்து, மஞ்சள் அடையாள வில்லை ஒட்ட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ர.சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.