அதிரை நியூஸ்: மே.19
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சொந்த ஊருக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நிவாரணப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு ரயில் மூலமாக சென்ற வெளிமாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் வழியனுப்பி வைத்தார்.
கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலை செய்துவந்த வெளிமாநில தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 255 பணியாளர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 217 பணியாளர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 106 பணியாளர்கள் என 20 குழந்தைகள் உட்பட மொத்தம் 608 வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து சுமார் 4000 நபர்கள் வேலை செய்து வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சில வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களில் சுமார் 2000 பேர் தங்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
அவர்களில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வேலை செய்துவந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும்ää பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், அவர்களை பணியமர்த்தியவர்கள் சார்பிலும் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது. சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுää மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகே சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 72 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 66 நபர்கள் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 6 நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், எட்டு பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த வாரத்தில் கண்டறியப்பட்டது.
அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளிலுள்ள எட்டு சோதனைச் சாவடிகளில் வருவாய் துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையை சேர்ந்த அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான சாலைகளை தவிர்த்து சிறிய சாலைகள் வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் வருபவர்கள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களிடமோ அல்லது 1077 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் ஈடுபடலாம். தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம். வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் அனுமதி பெற வேண்டும். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜெ.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சக்திவேல், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய்க் கோட்ட அலுவலர் வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.