தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 21.05.2020 அன்று குடிநீர் வழங்கல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சார்பாக உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு மின்வாரிய அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடை காலத்தில் ஊரகம், நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்கிட குடிநீர் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தடையில்லா மின்சாரம் வழங்கி அதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தனி நபர் குடிநீர் இணைப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
ஊரக பகுதிகளில் குடிநீர் தடையின்றி வழங்கிடவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை கண்காணித்திட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் மின்வாரிய உதவிகோட்ட பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட வாட்ஸ் அப் குருப் உருவாக்கிட அறிவுரை வழங்கப்பட்டது.
எம் எஸ் எம் நகர் பகுதியில் அடிக்கடி பம்பு ரிப்பேர் ஆகிவிடுகின்றது தண்ணீர் வரும் தண்ணீர் வரும் பாதை வழியாக சிலர் பிளாட்பாரம் கட்டி அந்த பிளாட்பாரத்தின் கீழ் உடைப்பு ஏற்ப்படும் தருணம் ஊராட்ச்சிக்கு தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் ஆகிவிடுகின்றது அதை சரி செய்ய அந்த நாட்களின் மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிறம்பம் அடைகின்றார்கள். ஆகவே தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அவர்களால் நடை பெற்ற ஆய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியபடி காதர் மைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள MSM நகர் பகுதிக்கு தடையில்லா தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு MSM நகரை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
ReplyDelete