அதிரை நியூஸ்: மே 10
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கபட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்து மண்டல கொரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் இன்று (10.05.2020) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துதல், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துதல் ஆகியவை குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.
கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 24.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவானது 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 11.05.2020 திங்கட்கிழமை முதல் தமிழக அரசின் அறிவுரையின்படி வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு செயல்படும் நேரத்திற்கான அனுமதி அளிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோல் பம்புகள் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்கள் தனி குளிர்சாதன வசதியுடன் (Standalone Airconditioners) தனிக்கட்டிடத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டும்) கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் உட்பட 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்ற பின்னரே இயங்க அனுமதிக்கப்படும்.
ஊரகப்பகுதிகளிலும், நகரப்பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, மொபைல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள், சானிட்டரிவேர், மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood shops) காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது (முடிதிருத்தும் கடைகள், அழகு கலை கடைகள், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் மால் தவிர்த்து)
நமது மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் (கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்கவேண்டும். மேலும் தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதியில்லை இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி கிருமிநீக்கம் செய்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை நிறுவன உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் அரசின் மறு உத்தரவு வரும் வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படும்.
நமது மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 3 வண்ண அடையாள அட்டைகளை பயன்படுத்தியே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரவேண்டும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் மாதிரி அடையாள அட்டைகள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்து வரவேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் பணிக்கு செல்லும் பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் ஒருவரும், நான்கு சக்கர வாகனத்தில் இருவரும் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் மீது காவல் துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தற்போது வழங்கிவரும் ஆதரவினைப் போன்று தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக குடும்ப விளக்கு நிதியகம் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை நிதியுதவி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர்.மருததுரை, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ரவீந்திரன், முன்னாள் முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.