.

Pages

Thursday, July 16, 2020

அதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பில் 5 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைப்பு!

அதிராம்பட்டினம், ஜூலை 16
அதிரை பைத்துல்மால் சேவைத்திட்டத்தின் கீழ், பிலால் நகரில் கழிப்பறை வசதி இல்லாத குடிசை வீடுகளில் வாழும் ஏழைக்குடும்பங்களுக்கு ரூ.1.36 லட்சம் மதிப்பீட்டில் 5 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, அவற்றை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் இன்று வியாழக்கிழமை ஒப்படைத்தனர். அப்போது, ஏழைகளின் தேவையறிந்து உதவிவரும் அதிரை பைத்துல்மால் சேவையகத்துக்கு பயனாளிகள் அனைவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஏழைக்குடும்பங்களுக்கு அடிப்படை வசதியை பூர்த்தி செய்யும் வகையில், கழிப்பறைகள் கட்டிக்கொடுத்திருக்கும் அதிரை பைத்துல்மால் குவைத் கிளை நிர்வாகிகளுக்கு, அதிரை பைத்துல்மால் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.