அதிரை நியூஸ்: ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலர் ப்ரதீப் யாதவ் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (18.07.2020) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரி எடுக்கும் இடங்கள், வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட் போன்ற கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள இடங்களில் தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்துதல், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை தயார்படுத்துதல் ஆகியவை குறித்து கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திடுமாறும், வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து பரிசோதனை செய்யாமல் இருப்பவர்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியினை தீவிரப்படுத்துமாறும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
முழு கவச உடை, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றின் கையிருப்பு குறித்து கேட்டறிந்த கண்காணிப்பு அலுவலர் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள், கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்தாத வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்திடுமாறு அறிவுறுத்தினார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தி மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்று வருவது குறித்து கண்காணிப்பு அலுவலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும், பருவ மழைக்காலம் வரவுள்ளதால், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால்களை தயார் செய்திடுமாறும், டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திடுமாறும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி கோரிகுளம் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் பொதுமக்களுக்கு செய்யப்படும் பரிசோதனை முறை குறித்து கேட்டறிந்தார். காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகளவில் நடத்திடுமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.