![]() |
எஸ்.சாஜித் அஹமது |
கொரோனா சூழலில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..!
உலகமெங்கும் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்,தமிழகத்தில் பல மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும், காவல்துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிலர் மரணம் அடைந்தனர்.
இச்சூழலில், மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்டாலும், தங்களால் இயன்ற வரையில் தினமும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு அரசின் அறிவுறுத்தலின் பெயரில் சிகிச்சை அல்லது ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஹவான் சாதிக் பாட்சா. இவரது மகன் சாஜித் அஹமது (20). சென்னையில் உள்ள தனியார் செவிலியம் கல்லூரியில் இளங்கலை செவிலியர் கல்வி பயிலும் மாணவர். அதிராம்பட்டினம் பகுதியில் செவிலியம் படிக்கும் முதல் ஆண் மாணவராவார்.
இவர் அதிராம்பட்டினம் பகுதியில் கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை சென்று தினசரி ஊசி போட முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று ஊசி போடுதல், அவர்களின் உடல்நிலை குறித்து அந்தந்த துறை மருத்துவர்களை அணுகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உதவியாக பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
கரோனா வைரஸ் பரவும் சூழலில் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தொடர்ந்து மருத்துவத் துறையில் செவிலிய மாணவனாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், நான் மருத்துவராக ஆகவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. ஆனால், என்னால் மருத்துவராக முடியவில்லை. ஆகவே, மருத்துவத்துறையில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என்பதற்காக செவிலியம் பயின்று வருகிறேன். இதன் மூலம் என்னால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்யலாம் என முடிவெடுத்து அதன்படி, தற்பொழுது கல்லூரியில் பயின்று வருகிறேன். மேலும் தான் கற்ற கல்வியை மக்களுக்கு பயனுள்ளதாக அமைத்துக்கொள்வேன் என்றும் கூறினார்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்👍
ReplyDeleteதம்பிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பி உங்கள் எண்ணம் நிறை வேற வாழ்த்துகிறேன்
ReplyDeleteதம்பி உங்கள் எண்ணம் நிறை வேற வாழ்த்துகிறேன்
ReplyDeleteCongratulations brother, Allah bless you.
ReplyDeleteநல்ல எண்ணமும் செயலும் கொண்ட இவர் வாழ்வில் வெற்றிபெற வேண்டுவோம் .
ReplyDelete