அதிராம்பட்டினம், ஜூலை 27
அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு குறித்த நேரத்துக்கு அழைத்துச் செல்வது, குணமடைந்தவர்களை சிகிச்சை மையங்களிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவது, இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வது என ஆம்புலன்ஸ்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதியினர் பலரும் அவசர மருத்துவச் சேவைக்காக பயன்படுத்தி வரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) அமைப்பிற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தை கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டி, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் பேரூர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை, தமுமுக மாநில துணைச்செயலாளர் அதிரை அகமது ஹாஜா மற்றும் அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.