அதிரை நியூஸ்: ஜூலை 21
தஞ்சாவூர் மாநகரிலுள்ள வணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய்துள்ளதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை கருவி மற்றும் பிராண வாயு அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றின் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லம் கொரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல்ää கிருமிநாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளில் கடைகள் நடத்தும் வணிகர்கள் தாமாகவே முன்வந்து அனைத்து கடைகளையும் 22.07.2020 முதல் 31.07.2020 வரை மாலை 4 மணிக்குள் மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர். வணிகர் சங்கத்தின் முடிவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அனைவரும் இதுபோன்று சமூக அக்கறையுடன் நடந்து கொண்டால், கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாக ஒழிக்க முடியும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.