அதிரை நியூஸ்: ஜூலை 20
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (20.07.2020) ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 1161 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 616 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 529 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி மற்றும் கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றாத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டார ஊரகப் பகுதிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை பதிவாகும் இடங்களை கண்டறிந்து, அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில், பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) டாக்டர்.மருததுரை, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராமு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் (பொ) மணிவேலன், உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணியா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.