அமெரிக்கவாழ் அதிரையர் கூட்டமைப்பு (AAF) அதிராம்பட்டினம் பொதுமக்களுக்கு விடுக்கும் கனிவான வேண்டுகோள்.
கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மெயின்ரோடு அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சுகாதரத்துறையினரால் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் உள்ள பொதுமக்கள் தாமாக முன்வந்து மருத்துவச் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அதிக அளவில் காய்ச்சல் பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்தொற்று ஏற்பட்டுள்ளோரை கண்டறிந்து தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இழப்புகளை தவிர்த்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தல்.
காய்ச்சல் உள்ளவர்கள் அலட்சியம் செய்யாமல் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்திற்காக மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் நம்முடைய முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.
இப்படிக்கு,
அமெரிக்கவாழ் அதிரையர் கூட்டமைப்பு (AAF)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.