.

Pages

Friday, July 24, 2020

அதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 24
கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக்கூட்டம் அதிராம்பட்டினம் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.புகழேந்தி கணேஷ், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சியினர் ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், வர்த்தகர்கள், தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.

இதில், கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத்தம்மாள்தெரு கோவில் வளாகம், மெயின் ரோடு அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளி, பேருந்து நிலையம் ஆகிய 4 இடங்களில் சுகாதரத்துறையினரால் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை கருவி மற்றும் பிராண வாயு அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றின் மூலம் மேற்கொண்டு வரும் பரிசோதனை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.