.

Pages

Monday, July 13, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் வழங்கும் உணவு குறித்து ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 13
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா பிரிவில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (13.07.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை 6.30 மணிக்கு டீ, காலை 8 மணிக்கு மூன்று இட்லி, சாம்பார் மற்றும் கபசுரக் குடிநீர், காலை 10 மணிக்கு ரொட்டி, பால், இரண்டு வாழைப்பழங்கள், காலை 11 மணிக்கு கபசுரக் குடிநீர் அல்லது நெல்லிக்காய் ஜூஸ், கிரீன் டீ  (ஏதேனும் ஒன்று), மதியம் 1 மணிக்கு மதிய சாப்பாடு,  இரண்டு முட்டைகள், பொரியல், கீரை சாம்பார் மற்றும் மோர், மாலை 03.00 மணிக்கு கபசுர குடிநீர், மாலை 4 மணிக்கு டீ சுண்டல், ராகி கொழுக்கட்டை மற்றும் பச்சைப்பயிறு, இரவு 7 மணிக்கு கிச்சடி மற்றும் சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்து நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சமையலறையில் உணவு தயாரிக்கும் முறையினை நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கப்படும் வேளைகள், உணவு வழங்கப்படும் முறைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சமையல் பொருட்கள் வைப்பறையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சுடுதண்ணீர் அவசியம் என்பதால், அவர்களுக்கு முதற்கட்டமாக 85 சுடுநீர் குடுவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இவ்வாய்வின்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) டாக்டர் மருததுரை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.