அதிராம்பட்டினம், ஜூலை 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (25.07.2020) சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், புதுமனைத்தெரு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகம் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கான காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறுவதையும், கர்ப்பிணிகளுக்கு ஸ்வாப் பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து, அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.