.

Pages

Wednesday, July 15, 2020

கரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப் பதிவு: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூலை 15
கரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ்  தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் மாநகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட காரணத்தினால், தொடர்புடைய மருத்துவமனைகள் மூடப்பட்டதாக தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலருக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் வந்துள்ளது. அதனடிப்படையில், புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் வாட்ஸ்-அப் மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

எனவே, தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மர்ம நபரை கண்டுபிடித்து, அவர்மீது நடவடிக்கை எடுத்திட புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் அவர்களால் தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், கொரோனா நோய் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பிய மர்ம நபர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 153, 505(1)(டி), 67 ஆகிய பிரிவுகளின் கீழும், பேரிடர் மேலாண்மை சட்டம் 54 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வதந்தி பரப்பிய மர்ம நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாத செய்திகள் மற்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.