.

Pages

Wednesday, July 15, 2020

அதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 15
சுய பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்காப்பு உத்திகளை அறிந்துகொள்ளும் வகையில், தற்காப்பு கலை (டேக்வான்டோ) டெமு பயிற்சி வகுப்பு கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ராஜகிரி டேக்வான்டோ கிளப் சீனியர் கராத்தே பயிற்சியாளர் முகமது சரீப், தற்காப்புக் கலை உத்திகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹனி சேக் செய்திருந்தார்.

எதிர்வரும் (17-07-2020) வெள்ளிக்கிழமை முதல் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத்தரக்கூடிய ஒரு விளையாட்டு. உடல் ஆரோக்கியம், சுய பாதுகாப்பு ஆகியவற்றோடு, வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
ஹனி சேக் 7010425858
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.