அதிரை நியூஸ்: ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், வண்ணாரபேட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (30.07.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் எனப்படும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 159 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த நான்கு வருடங்களுக்குள் தஞ்சாவூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
தரமான குடிநீர், தேவையான அளவு குடிநீர், அனைத்து நேரங்களிலும் குடிநீர் வழங்குவதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். கிராமத்திலுள்ள நீராதாரங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்து நீர் வளத்தை பெருக்குவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட முடியும். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் உள்ளன. 589 ஊராட்சிகளில் 2260 குக்கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 159 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் 2024 ஆண்டுக்குள் மீதமுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.
அதற்கு தேவையான ஆழ்குழாய் போர் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு, நிலத்தடி நீரை பெருக்கவும், குளம், ஏரி, மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து சேமிக்க வேண்டும். மழையே இல்லாவிட்டாலும், தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்படும். இந்த திட்டத்தை கிராம சபா கூட்டம் மூலம், தண்ணீரை சேமிக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு சென்று, அதிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்வது, எப்படி பயன்படுத்துவது பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும். ஊராட்சியிலுள்ளவர்கள் நிலத்தடி நீர் மட்டும் பெருக்குவதற்கு உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படும்.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்நிலைகளுக்குக்கான வரத்து வாய்க்கால்களில் நடந்தே சென்று தலைப்பு பகுதிவரை பார்வையிட்டு, வரத்து வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் தண்ணீர் முறையாக வருகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரு குடும்பத்திற்கு தேவையான நீரின் அளவு, தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டிபாளையம் ஊராட்சி அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ரவீந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.