கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் பெரிய கடைத்தெரு (காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று (16-07-2020) வியாழக்கிழமை காலை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம். நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்ர் கலந்துகொண்டு வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்பட பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.
நிகழ்வில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பி.பிச்சமுத்து, மாணிக்க முத்துசாமி, ஏ.வி.எம் அபூபக்கர், சி.சார்லஸ், பி.உமா சங்கர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், குப்பாசா அகமது கபீர், ஏ.வி.எம் வரிசை முகமது, கஜாலி, ஏ.முகமது ஆரிப், முகமது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புகைப்படத்திற்காக கபசூரக் குடிநீர் முகாம் நடத்துவது போன்று இருக்கிறது...!! அல்லாஹுவிர்காக செய்யுங்கள்...
ReplyDelete